கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்வீட் எடு, கொண்டாடு! குழந்தைகள் நாளில் 62.4 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்குகிறது தமிழக அரசு!

குழந்தைகள் நாளையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கேக் வழங்குவது குறித்து...

குழந்தைகள் நாளில் 62.4 லட்சம் மாணவர்களுக்கு கேக்... - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 10:44 am IST

குழந்தைகள் நாளையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ. 7.54 கோடிக்கு கேக் துண்டுகளை தமிழக அரசு கொள்முதல் செய்யவிருக்கிறது.

நாட்டில் குழந்தைகள் நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் நாளையொட்டி, பள்ளி மாணவர்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாகவும், அவர்களுக்குக் குழந்தைகள் நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக 62,46,412 கேக் துண்டுகளை தமிழக அரசு கொள்முதல் செய்யவிருக்கிறது. ஒரு கேக் துண்டு 45 கிராம் இருக்கும் அளவிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல், ஐடிசி நிறுவனங்களிடம் இருந்து சாக்லேட், அன்னாசி, ஆரஞ்சு, பட்டர், பால் சுவை கொண்ட கேக் துண்டுகள் ரூ. 7.54 கோடிக்கு கொள்முதல் செய்யப்படவுள்ளன.

நிறுவனங்களில் தரத்தைச் சோதித்த பிறகு, நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு கேக் துண்டுகள் வழங்கப்படவுள்ளன.

Summary

Tamil Nadu government distributes cakes to 62.4 lakh students on Children's Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.