தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குழந்தைகள் தினத்துக்கு 62.46 லட்சம் கேக்குகள் கொள்முதல்: தமிழக அரசு ஒப்பந்தம்

குழந்தைகள் தினத்துக்கு 62.46 லட்சம் கேக்குகள் கொள்முதல்: தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 4:54 am IST

வரும் நவ. 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க 62.46 லட்சம் கேக் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல், ஐடிசி ஆகிய 4 நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கேக் விநியோகத்துக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பிரிட்டானியா நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10,03,996 கேக்குகளையும், ட்ரீம் பேக் நிறுவனம் 45 கிராம் எடையுள்ள கேக்குகள் மற்றும் 50 கிராம் எடையுள்ள ஸ்விஸ் ரோல் வகைகள் என மொத்தம் 33,87,459 பாக்கெட்டுகளையும் வழங்க உள்ளன.

எலைட் நேச்சுரல் நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10,06,861 கேக்குகளையும், ஐடிசி நிறுவனம் 43.2 கிராம் எடையுள்ள 8,48,096 ட்வின் பேக் ஸ்விஸ் ரோல் பாக்கெட்டுகளையும் வழங்க உள்ளன.

இந்த 4 நிறுவனங்கள் மூலம் மொத்தம் 62,46,412 கேக் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான மொத்த ஒப்பந்த மதிப்பு ரூ.7,34,11,565.97 ஆகும். இந்த கேக்குகள் நவ. 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரே வகையான கேக் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேக்குகளின் தரம், அளவு, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, உணவுப் பாதுகாப்பு உரிம விவரங்கள் உள்ளிட்டவை சரிபாா்க்கப்படும். மேலும் கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன்பு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேக்குகளின் தரத்தைப் பரிசோதனை செய்வாா்கள் என்றும் ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Tamil Nadu government signs agreement to purchase 62.46 lakh cakes for Children's Day

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.