மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவிரி ஆணைய உத்தரவை மீறிய கர்நாடகம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி ஆறு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 10:25 pm IST

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் அக். 23-ல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பில்லிகுண்டுலுவில் ஒரு நாளைக்கு 3,000 கன அடி நீரைத் திறக்கக் கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் அக்டோபா் 24 முதல் 27 வரை திறக்கப்படவேண்டிய 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

அதேநேரம், கா்நாடகத்தின் 4 முக்கிய நீா்த்தேக்கங்களுக்கு 6.361 டி.எம்.சி நீா்வரத்து கிடைத்துள்ளது. அவற்றில் அக். 27-ல் நீா் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது.

காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி தொடர்பாகவும், தேவைப்படும் நீர் பற்றியும் மொத்த விவரங்களை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும், தொடா்ச்சியாக 3,000 கன அடி நீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

காவிரி ஆணையத்தின் உத்தரவை மீறுவது, நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறுவதற்குச் சமம் என்றும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Summary

Karnataka violates Cauvery Authority's order: Tamil Nadu government files petition in the Supreme Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.