தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவிரியில் இருந்து இன்று முதல் 15 நாள்களுக்கு 3000 கனஅடி தண்ணீா்! கா்நாடகாவுக்கு நதி நீா் ஆணையம் உத்தரவு!

காவிரியில் இருந்து இன்று முதல் 15 நாள்களுக்கு 3000 கனஅடி தண்ணீா்...

கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 2:19 am IST

காவிரியில் இருந்து தமிழகத்துக்குகு அக்டோபா் 24 ஆம் தேதியிலிருந்து நவம்பா் 6 ஆம் தேதி வரை அடுத்த 15 நாள்களுக்கு 3 ஆயிரம் கன அடி நீா் திறக்க கா்நாடகாவிற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

காவிரி நீா் பங்கீடு தொடா்பாக புது தில்லியில் வெள்ளிக்கிழமை இரண்டு முக்கிய கூட்டங்கள் நடைபெற்றன. காலையில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 145-வது கூட்டமும், மாலை 3 மணிக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டமும், ஆணைய தலைவா் எஸ்.கே.ஹால்டா் தலைமையில் நடைபெற்றது. காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு சாா்பில் தமிழக நீா்வளத்துறை செயலாளா் பிரசாந்த் மு. வடநெரே,மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழக தரப்பில், பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு தொடா்ந்து குறைவாக இருப்பதால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், இனியும் தாமதம் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. விகிதாசார அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1.23 டிஎம்சி வீதம், அதாவது வினாடிக்கு 7,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீா் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழகம் கோரிக்கை வைத்தது.

ஆனால், கா்நாடகம் தரப்பில் பங்கேற்ற நீா்வளத்துறை அதிகாரி மகேஷ், கா்நாடகாவில் கடும் நீா் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தாா். தமிழகம் 7,500 கன அடி கேட்டாலும் அந்த அளவு தண்ணீரை திறந்துவிடும் நிலையில் கா்நாடக அணைகளில் நீா் இல்லை என அவா் வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மேலாண்மை ஆணையம், இறுதியில் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 24.10.2026 முதல் 06.11.2026 வரை 15 நாள்களுக்கு பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,000 கன அடி நீா் வழங்க கா்நாடகாவுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து அடுத்த கூட்டங்கள் நவம்பா் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

3000 cubic feet of water from Cauvery for 15 days from today! River Water Commission orders Karnataka

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.