தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தக் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? உதயநிதி கண்டனம்!

தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 9:52 pm IST

தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சீப் சிஎம்-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் ஆன்லைன் அப்யூஸர்ஸ் வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?

நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் டம்மி சிஎம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?

இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.

இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை ரிவர்ஸ் கியர் போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் கையிருப்பில் உள்ளதாகவும், அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

Summary

Udhayanidhi Stalin has condemned the Tamil Nadu government for procuring electricity at a higher price.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.