கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்; மறுபக்கம் கைதிகள் தப்பியோட்டம்! உதயநிதி

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு....

Udhayanidhi

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 11:56 am IST

இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என கேள்வி எழுகிறது? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் 200 கைதிகள் உள்ள நிலையில், நேற்று (திங்கள்கிழமை) இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடினர். இந்த 17 பேரில் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில் 13 பேரைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இதுபற்றி நேரில் ஆய்வு செய்ய தேனி வரவுள்ளார். இந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி எதிர்க்கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்கெட்டு போய் இருக்கும் இந்த ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன். சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?

ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று சட்டமீறலின் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த முதலமைச்சரின் சாதனை. தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin on 17 prisoners escaped from the Theni District Jail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.