தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி கைதிகள் விவகாரம்: சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

theni jail

தேனி மாவட்ட சிறை - படம்: தினமணி

Published On :31 அக்டோபர் 2026, 8:57 am IST

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் கடந்த திங்கள்கிழமை (அக். 26) இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலர் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தார். அப்போது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் ஸ்டாலின் பிரபுவைத் தாக்கியதுடன், நுழைவு வாயிலிருந்த காவலர் தங்கபாண்டியையும் தாக்கி, அவரிடமிருந்த சாவியைப் பறித்து கதவைத் திறந்து தப்பிச் சென்றனர்.

தப்பியோடிய கைதிகளில் 15 பேர் காவல்துறையின் அதிரடி தேடுதல் நடவடிக்கையால் அடுத்த 43 மணி நேரத்தில் கைதான நிலையில், இருவர் சரணடைந்தனர்.

கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதற்கு மூளையாகச் செயல்பட்ட லிங்க பிரசாத் உள்பட 3 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த விவகாரத்தில், சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் நாகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Theni prisoners issue: Prison's in-charge superintendent suspended!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.