மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளா் இந்தியரா? விசாரிக்கக் கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சௌரவ் தாஸ் - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:23 am IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் சௌரவ் தாஸ் இந்தியரா என்பது குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜமீன் பல்லாவரத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளா் சௌரவ் தாஸ் இந்தியா்தானா என்பது குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். மத்திய அரசு நடத்தும் விசாரணையில் சௌரவ் தாஸ், நேபாளி என்பது தெரியவந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய கடவுச்சீட்டு, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்.

நீதித் துறை குறித்தும், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்துகளை எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறாா். எனவே, அவருடைய சமூக வலைதளக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளாா்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெகந்நாத், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தாா். இதையடுத்து, இந்த மனுவுக்கு மத்திய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.