தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

17 கைதிகள் தப்பிய தேனி சிறையில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு!

17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சிறையில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு செய்வது பற்றி...

theni jail

தேனி மாவட்ட சிறை - படம்: தினமணி

Published On :31 அக்டோபர் 2026, 5:57 pm IST

17 கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சிறையில் ஏடிஜிபி சங்கர் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டச் சிறையில் கடந்த அக். 26 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இதனிடையே, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ரத்தோர், மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் சிறை கண்காணிப்பாளர், காவலர்கள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சிறைத் துறை ஏடிஜிபி சங்கர் இன்று தேனி தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் ஆய்வு செய்தார்.

17 கைதிகள் தப்பியோடியது குறித்தும் சிறையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். சிறைகளில் ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. அது 100% கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.

Summary

ADGP Shankar inspects Theni prison from which 17 prisoners escaped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.