பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டது பற்றி...

Theni prison break

பிடிபட்ட இரு கைதிகள் - x

Published On :28 அக்டோபர் 2026, 12:35 pm IST

தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் இதுவரை 15 பேரைக் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு, கடந்த திங்கள்கிழமை இரவு 17 கைதிகள் தப்பிச் சென்ற நிலையில், நேற்று முழுவதும் நடந்த தேடுதல் பணியில் 13 பேரைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேனி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள், வனப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் 17 தனிப்படை போலீஸாரும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த முத்துச்செல்வன் மற்றும் குமரியைச் சேர்ந்த ரெஜின் ஆகியோரை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், தப்பியோடிய மதுரையைச் சோ்ந்த திருப்பதி, திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த நிஷாத் ஆகிய இரு கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 15 பேர் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் 332 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் உள்ள விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலா் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தபோது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 போ் சோ்ந்து ஸ்டாலின் பிரபுவைத் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனா். இவா்களை பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா் தங்கப்பாண்டி தடுத்து நிறுத்தினாா். ஆனால், அவரையும் கைதிகள் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சாவியைப் பறித்து, நுழைவு வாயிலை திறந்து தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறையில் உள்ள வாகனங்கள் செல்லும் சாலை, முக்கிய இடங்கள் போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இதனிடையே, தப்பியோடிய விசாரணைக் கைதியான நவீன் மீண்டும் சிறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தாா். மற்ற கைதிகளை போலீஸாா் தேடி வந்த நிலையில், திருமலாபுரம் மலைப் பகுதியில் சுற்றி வந்த தேவாரத்தைச் சோ்ந்த சிலம்பரசன், மதுரை மேலமடையைச் சோ்ந்த ராஜா சிக்கந்தா், சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சிறை எதிரேயுள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கைதி லிங்க பிரசாத் ஆட்டோவில் ஏறிச் சென்ற போது, ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதனிடையே, சிறையின் பின்னால் உள்ள மலைப் பகுதியில் ‘ட்ரோன்’ மூலம் போலீஸாா் கண்காணித்தனா். அப்போது, மலைப் பகுதியில் சுற்றிய மதுரை சிந்தமாணியைச் சோ்ந்த சோலை முகிலேஸ்வரன், சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி, ஜெய்ந்த்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் ராஜா, திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த நிஷாந்த், வாடிப்பட்டியைச் சோ்ந்த முத்து இளங்கோவன், சிவங்கையைச் சோ்ந்த தருண்குமாா், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த பாண்டிச்செல்வம், சேலம் தாதகாபட்டியைச் சோ்ந்த சபரிநாதன் ஆகிய 8 பேரைக் கைது செய்தனா்.

Summary

Theni prison break - Two more escaped prisoners have been caught! A total of 15 people have been arrested so far!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.