மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு.

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Published On :19 அக்டோபர் 2026, 11:02 am IST

சென்னையில் உள்ள ஆறுகளை சீரமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

செலவு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் நவ. 3 ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் தலைவர் பாலாஜி நரசிம்மன் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அமைத்தது.

இந்தக் குழு குறுகிய காலம் 2026 வடகிழக்குப் பருவமழைக்கு முன், நடுத்தர காலம் -2027 கோடைகாலத்துக்கு முன், நீண்ட காலம் அடுத்த 3-5 ஆண்டுகளுக்குள் என 3 செயலாக்க காலங்களில் பல்வேறு துறைகளின் கீழ் பரிந்துரைகளை அளித்துள்ளது. முதல்வர் விஜய்யிடம் இந்த அறிக்கை கடந்த செப்.21-ல் அளிக்கப்பட்டது.

ஆறுகள், கால்வாய்கள் மற்றும் முக்கிய வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என குறுகிய கால பரிந்துரையாக அளிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத் துறையின் கீழ் உள்ள முக்கிய ஆறுகள், கால்வாய்கள், நீர்வழிகள், வெளியேற்ற வாயில்கள், குளங்கள், மதகுகள், வெள்ளத் தடுப்புகள், அணைகள் மற்றும் கரைக்கட்டுகளில் அவசரகால சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has invited tenders to rehabilitate rivers in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.