தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

4,900 மெகாவாட் மின்சாரம்! 4-ஆவது குறுகிய கால டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு!

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக தமிழக அரசு 4-ஆவது குறுகிய கால டெண்டர் வெளியிட்டது குறித்து...

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக 4-ஆவது குறுகிய கால டெண்டர் - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 11:31 am IST

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிச் சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் மின் தேவையை பூா்த்தி செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக மின்சாரம் வாங்கும் நடவடிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.

கடந்த அக். 15-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தினமும் 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்க, சில நிறுவனங்களிடம் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பல மாவட்டங்களில் மழை பெய்வதால், மின் தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் மின் கொள்முதலும் குறைந்துள்ளது.

அக்டோபர் மாத தேவைக்காக 4,500 மெகாவாட், 2027 பிப்ரவரி - ஜூலை இடையிலான தேவைக்கு 1,500, 2026 நவம்பர் - 2027 மே வரையிலான மாலை நேர மின் தேவையைச் சமாளிப்பதற்காக மாதத்துக்கு 1,000 மெகாவாட் என மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு 3 குறுகிய கால டெண்டர் கோரப்பட்டது.

இந்த நிலையில், 2026 நவம்பர் - 2027 ஜனவரி இடையிலான மின் தேவைக்காக 4,900 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய 4-ஆவது குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Summary

4,900 MW of electricity: Tamil Nadu government issues 4th short-term tender

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.