தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!

வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்குவதை தமிழ்நாடு அரசு குறைத்தது குறித்து...

TN Govt

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 1:02 am IST

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்குவதை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நாட்டில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், 2026 - 27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்டர்) வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்கும் விகிதத்தை தமிழ்நாடு அரசு 21 சதவிகிதம் குறைத்துள்ளது.

கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 51,300 கோடியாக இருந்த கடன்தொகை, நடப்பு நிதியாண்டில் ரூ. 40,500 கோடியாகச் சரிந்துள்ளது. இதன்மூலம், அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு தமிழ்நாடு இறங்கியது.

அதிகம் கடன் வாங்கும் பட்டியலில் தற்போது முதலிடத்தில் மகாராஷ்டிரமும், இரண்டாமிடத்தில் ஆந்திர பிரதேசமும், மூன்றாமிடத்தில் தெலங்கானாவும், நான்காமிடத்தில் ராஜஸ்தானும், ஐந்தாமிடத்தில் தமிழ்நாடும் உள்ளது.

ஜிஎஸ்டி, சீரான வரி வருவாய், மத்திய அரசிடமிருந்து தடையின்றி கிடைத்த வரிப் பங்கீடு ஆகியவற்றால் கடன் தேவை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் ரூ. 48,000 கோடி கடன் வாங்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The Tamil Nadu government has reduced borrowing for development projects by 21% in the first half of the current financial year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.