தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓரணியாய் நின்று... தமிழ்நாடு நாளில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழ்நாடு நாளில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தது குறித்து...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:00 pm IST

தமிழ்நாடு நாளான இன்று (நவ. 1) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ஜூலை 28 ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு நாளான இன்று பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும் சங்க இலக்கியங்களின் செழுமையும் தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று. நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

வீரத்திலும் அறிவிலும் கலை-பண்பாட்டிலும் சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Summary

On the occasion of Tamil Nadu Day today (Nov. 1), AIADMK General Secretary Edappadi Palaniswami has extended his greetings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.