பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. சிறையில் முதல்வர் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

சிறையில் முதல்வர் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளதைப் பற்றி...

Chief Minister Vijay -  Edappadi Palaniswami

முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி.

Published On :27 அக்டோபர் 2026, 8:32 am IST

சிறையில் முதல்வர் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? என்று முதல்வர் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை சிறையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200-க்கு மேற்பட்டோரை அடைத்துள்ளனர். திங்கள்கிழமை இரவு சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு, 17- க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினர்.

இதுகுறித்து சிறைக் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் நான்கு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை ஃப்யூஸ் (Fuse) பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.

மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight! எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!

ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்! அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே முதல்வர் விஜய், நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?

கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்? அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம், இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized Chief Minister Vijay, asking, "Was the escape of prisoners from jail some kind of astrological remedy?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.