கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

‘பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்’ - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:13 pm IST

பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சாக்லேட், பால் ரஸ்க் ஆகியவற்றுக்கும் பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை கடந்தாண்டைவிட 15 முதல் 20% வரை அதிகரித்துள்ளது.

மூலப்பொருள்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழக மக்களுக்கு “வெற்றித் தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தவெக அரசு.

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!

“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் முதல்வர் விஜய் அவர்களே?

மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Edappadi Palaniswami has criticized the practice, warning against selling Aavin products on the black market out of habit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.