தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிங்கப் பெண் படை எங்கே போனது? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது என்று தெரியவில்லை? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது பற்றி...

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 6:43 pm IST

சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது என்று தெரியவில்லை? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

“பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெக-வின் காமுக SIR-களால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சி தான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே “சிங்கப்பெண் அதிரடிப் படை” எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்- உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெக-வினர் என்றால், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

“நமக்கு நாமே பாதுகாப்பு” என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை! என்று தெரிவித்துள்ளார்.

Summary

Edappadi K. Palaniswami (EPS), the General Secretary of the AIADMK, raised this question criticizing the ruling TVK government over women's safety following criminal incidents reported in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.