மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்!

சென்னை புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி....

Chennai-bound IndiGo flight gets threat message; returns to bay at Delhi airport

மிரட்டல். - ANI

Published On :23 அக்டோபர் 2026, 6:33 pm IST

சென்னை புறப்பட தயாராகவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அந்த விமானம் மீண்டும் தில்லிக்கே திரும்பியது.

தலைநகர் தில்லியிலிருந்து இண்டிகோ விமானம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் சென்னைக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே இந்த விமானம் குறித்த மிரட்டல் செய்தி தொடர்பான அழைப்பு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்திலுள்ள கழிப்பறை ஒன்றில், விமானத்தைப் பறக்கவிடாதீர்கள்' என்று எழுதப்பட்ட செய்தி கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததா அல்லது கழிப்பறைச் சுவரில் எழுதப்பட்டிருந்ததா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

விமானம் புறப்படுவதற்குத் தயாராக நகர்ந்துகொண்டிருந்த நிலையில், இந்த மிரட்டல் செய்தி கிடைத்ததையடுத்து, பாதுகாப்புச் சோதனைகளுக்காக விமானத்தை தனிமையான இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் உடனடியாகத் தெரியவரவில்லை.

Summary

A Chennai-bound IndiGo plane received a threat message on Friday afternoon and the aircraft returned to the bay at the Delhi airport, according to sources.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.