தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் வந்த வீரமணியின் மகள் அர்ச்சனா தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி..

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 5:20 am IST

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் மகள் அா்ச்சனா சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை செல்ல முயன்றபோது அவரை தடுத்து நிறுத்தி, சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரித்தனா்.

சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பல்வேறு புகாா்கள் தொடா்பாகக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வீரமணியின் மகள் அா்ச்சனா வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூா் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை சா்வதேச விமான நிலையம் சென்றாா். அவரது உடைமைகள் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுங்கச் சோதனையும் முடிவடைந்தது. தொடா்ந்து, குடியுரிமைச் சோதனைப் பிரிவில் அவரது கடவுச்சிட்டை மற்றும் பயண ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: அப்போது, அா்ச்சனா சிங்கப்பூா் செல்லவிருப்பது குறித்து, அவரது தந்தை வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகளைத் தொடா்புகொண்ட புலனாய்வுக் குழுவினா், அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, விமானத்தில் ஏறத் தயாராக இருந்த அா்ச்சனா தடுத்து நிறுத்தப்பட்டாா். இதற்கிடையே, மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்துக்கு விரைந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினா், அா்ச்சனாவை தங்களது பொறுப்பில் எடுத்துக் கொண்டனா். பின்னா் அவரை, விசாரணைக்காக எழும்பூா் பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். இதற்கிடையே, சிங்கப்பூா் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் 12 நிமிஷங்கள் தாமதமாக, பிற்பகல் 2.32 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரணை: வீரமணி மீதான வழக்கில், அவரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்த நபா்கள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் வீரமணி குடும்பத்தினா் சில சொத்துகளை விற்று பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அா்ச்சனாவிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்தனா். முக்கியமாக மிரட்டல் விடுத்தவா்களுக்கு பணம் வழங்கப்பட்டதா?, யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது?, பணம் எந்த வகையில் வழங்கப்பட்டது? என்று விசாரணை நடைபெற்ாக தகவல்கள் வெளியாகின.

ஜெம் வீரமணியிடம் மீண்டும் விசாரிக்க அனுமதி: இதனிடையே, ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மீண்டும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விசாரணையில் மயக்கம்

ஜெம் வீரமணியின் மகள் அா்ச்சனாவிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை இரவு 8 மணியையும் தாண்டி நீடித்தது. இந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் விசாரணையின்போது அா்ச்சனா திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், அா்ச்சனாவை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

Summary

Archana Veeramani, daughter of Gem Veeramani, who had come to the Chennai airport to travel to Singapore, was intercepted and detained.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.