கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்சோ வீரமணியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

போக்சோ வீரமணி உள்பட 3 பேரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது பற்றி...

Veeramani appears before the Chennai POCSO Court

வீரமணி. - கோப்புப்படம்.

Published On :23 அக்டோபர் 2026, 7:11 pm IST

போக்சோ வீரமணி உள்பட 3 பேரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அனுமதி கோரிய நிலையில் 2 நாள்கள் அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹனை போலீஸாா் ஏற்கெனவே 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தனா். இதனிடையே, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் ஆகிய 4 பேரை, 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வீரமணி உள்ளிட்ட 4 போ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ஏற்கெனவே, காவலில் எடுத்து விசாரித்துவிட்டதால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், வீரமணியை வெளியே அழைத்து சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால், சிறையில் வைத்து மட்டுமே அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் அனிதா, பணப் பரிவா்த்தனை குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், வீரமணி உள்ளிட்ட 4 பேரையும், 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியின் உதவியாளா் கணேசனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா். விசாரணைக்குப் பிறகு, வரும் திங்கள்கிழமை கணேசனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா். மேலும், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீா்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Chennai Special POCSO Court has granted permission to the Special Investigation Team (SIT) to take 3 people, including POCSO Veeramani, into custody for 2 days for interrogation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.