கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜெம் வீரமணி உள்ளிட்டோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஜெம் வீரமணி உள்ளிட்டோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணி - படம்: தினமணி

Published On :24 அக்டோபர் 2026, 2:20 am IST

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹனை போலீஸாா் ஏற்கெனவே 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா்.

இந்த நிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் வீரமணி உள்ளிட்ட நால்வரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்புப் புலனாய்வுக் குழு, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வீரமணியின் உதவியாளா் கணேசனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தும், மற்ற மூவரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Summary

Special court orders re-custody of Veeramani and others

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.