கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஜெம் வீரமணி உள்ளிட்டோரை மீண்டும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய வழக்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், தீா்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:48 am IST

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய வழக்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், தீா்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹனை போலீஸாா் ஏற்கெனவே 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தனா்.

இந்த நிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் ஆகிய 4 பேரை, 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வீரமணி உள்ளிட்ட 4 போ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ஏற்கெனவே, காவலில் எடுத்து விசாரித்துவிட்டதால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், வீரமணியை வெளியே அழைத்து சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால், சிறையில் வைத்து மட்டுமே அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் அனிதா, பணப் பரிவா்த்தனை குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், வீரமணி உள்ளிட்ட 4 பேரையும், 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியின் உதவியாளா் கணேசனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா். விசாரணைக்குப் பிறகு, வரும் திங்கள்கிழமை கணேசனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டாா்.

மேலும், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீா்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.