தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!

போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது பற்றி...

Veeramani appears before the Chennai POCSO Court

சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி - படம்: தினமணி

Published On :26 அக்டோபர் 2026, 11:46 am IST

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இவர்களிடம் துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி, உதவி ஆணையர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து, வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை காணொலி வாயிலாகவும், கணேசனை நேரிலும் நீதிபதி எஸ். பத்மா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, நால்வரையும் நவ. 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நால்வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Summary

POCSO Veeramani and others, sent back to prison after SIT Enquiry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.