கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!

ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளானது பற்றி...

rahul convoy accident

ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து - படம்: எக்ஸ்

Published On :26 அக்டோபர் 2026, 11:34 am IST

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த 2018-இல் கா்நாடக பேரவைத் தோ்தலையொட்டி பெங்களூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போது பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவை அவதூறாக பேசியதாக உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ராகுல் காந்தி நேரில் ஆஜராகிறார்.

இதற்காக தில்லியிலிருந்து விமானம் மூலம் லக்னெள வந்தடைந்த ராகுல் காந்தி, பூர்வாஞ்சல் விரைவுச் சாலை வழியாக சுல்தான்பூருக்குப் பயணம் மேற்கொண்டார்.

லக்னெளவிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலுள்ள ஹலியாபூர் அருகே ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்தபோது, அவரது அணிவகுப்பில் (கான்வாய்) சென்ற 5 கார்களும், ஆம்புலன்ஸும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

Story image

படம்: எக்ஸ்

இந்த விபத்தில் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரது பாதுகாவலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்தவுடன் சுல்தான்பூர் நோக்கி ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார். சுல்தான்பூர் எல்லையில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Summary

Accident involving Rahul Gandhi's security vehicles! 5 cars and an ambulance collide!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.