தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்தி

ஐடிபிஐ வங்கி விற்பனைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - ANI

Published On :30 அக்டோபர் 2026, 2:43 pm IST

காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வங்கிகளை மோடி விற்பனை செய்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு மற்றும் எல்ஐசி வசமுள்ள ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவிகித பங்குகளை கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 52,878 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசும் எல்ஐசியும் இணைந்து வங்கியின் மீதமுள்ள 34 சதவிகித பங்குகளைத் தொடா்ந்து தங்கள் வசம் தக்க வைத்திருக்கும். அனைத்து பரிவர்த்தனைகளும் முடிந்தவுடன் வங்கியின் முழு நிர்வாகமும் ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐடிபிஐ வங்கியின் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசை விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நாட்டின் தொழில்துறையை கட்டமைப்பதற்காக ஐடிபிஐ வங்கி நிறுவப்பட்டது. மோடி ஆட்சிக் காலத்தில், முதலில் ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டது, அதன் பிறகு விலை நிர்ணயிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டன. மோடி ஆட்சிக் காலத்திலோ அவை விற்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“2003-ஆம் ஆண்டில், ஐடிபிஐ வங்கியில் எப்போதும் குறைந்தது 51 சதவீத பங்குகளைத் தன் வசம் வைத்திருப்பதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தது. இது எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படாத வாக்குறுதியாக இருக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பது இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும்.

ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கப்பட்டால், அதனுடன் சேர்ந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையும் பறிபோய்விடும். ஏற்கனவே பலவீனமடைந்துள்ள உங்கள் பணி நிபந்தனைகள், தங்களுக்கு இருந்த கடைசிப் பாதுகாப்பையும் இழந்துவிடும்.

தனியார் துறைக்கு இணையாக, வலுவான பொதுத்துறை இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை. பொதுத்துறை வங்கிகள் என்பவை விற்பனை செய்யப்பட வேண்டிய சொத்துக்கள் அல்ல; அவை தேசத்தைக் கட்டமைப்பதற்கான கருவிகள்.

உங்களின் இன்றைய போராட்டத்துக்கு நான் உறுதுணையாக நிற்கிறேன். உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரிக்கிறேன். ஒன்றிணைந்து இருங்கள். உறுதியுடன் செயல்படுங்கள். ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏா் இந்தியா விற்பனைக்குப் பிறகு நாட்டின் மிகப் பெரிய பங்கு விலக்கலாகவும், பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் நடவடிக்கையில் புதிய தொடக்கமாகவும் இது பாா்க்கப்படுகிறது.

Summary

Modi is selling off the banks created by the Congress! – Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.