
கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
சென்செக்ஸ் 383.55 புள்ளிகள் உயர்ந்து 77,301.40 புள்ளிகளாகவும், நிஃப்டி 149.75 புள்ளிகள் உயர்ந்து 23,960.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
மும்பை: தொடர்ந்து வரும் வெளிநாட்டு நிதி முதலீடு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு மத்தியில், முன்னணி பங்குகளான நிதி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாகனப் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாக, இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம் கண்டது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 478.19 புள்ளிகள் உயர்ந்து 77,396.04 புள்ளிகளை எட்டியது. பிறகான வர்த்தகத்தில், சென்செக்ஸ் 383.55 புள்ளிகள் உயர்ந்து 77,301.40 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உச்சபட்ச ஏற்றமாகும். அதே வேளையில் நிஃப்டி 149.75 புள்ளிகள் உயர்ந்து 23,960.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் 4,000 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து, 5.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் மற்றும் எடர்னல் ஆகிய பங்குகள் சரிந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 6,836.81 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு (காங்கிரஸ்) கட்டுப்பாட்டை வழங்கினர். இதில் அதிக கவனம் பெற்ற ஆளுநர் தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.
உள்நாட்டில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை, எதிர்பார்த்ததை விட சிறந்த காலாண்டு வருவாய் மற்றும் பண்டிகைக் கால நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த ஏற்றம் தொடர்ந்தது.
ஆசிய சந்தையில், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிறைவடைந்தன. ஐரோப்பிய சந்தை உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.73 சதவீதம் சரிந்து 102.8 டாலராக உள்ளது.
Summary
Stock markets rallied for the fifth consecutive day on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





