ஐவெகோ குழுமத்தை கையகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்!!

டாடா மோட்டார்ஸ் ஐவெகோ-வை கையகப்படுத்துவதால், உலகின் 4வது பெரிய வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்கும்.

டாடா மோட்டார்ஸ் - ஐவெகோ

Published On :3 நவம்பர் 2026, 7:47 pm IST

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் மற்றும் இத்தாலியைத் தலைமையிடமாகக் கொண்ட ஐவெகோ-வை கையகப்படுத்துவதால், உலகின் 4வது பெரிய வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்கும். இந்த புதிய நடவடிக்கையின் மூலம், நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா, ஐவெகோவின் 89.42% பங்குகளை சுமார் 3.43 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியுள்ளது. இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறதாக தெரிவித்துள்ளது.

ஐவெகோவை கையகப்படுத்துவதால், டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமாகிறது. 2008ல் ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்கிய பிறகு, டாடா மோட்டார்ஸின் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இது இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஐவெகோ நிறுவன பங்குகளை ஒவ்வொன்றையும் ரொக்கமாக 14.4 யூரோ விலையில் வாங்க டாடா மோட்டார்ஸ் முன்வந்ததுள்ளது.

பங்குதாரர்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில், 2026 நவம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரை ஐந்து வர்த்தக நாட்களுக்கு பங்கு ஒப்படைப்பு காலம் மீண்டும் திறக்கப்படும். இந்தக் காலகட்டத்தில் ஒப்படைக்கப்படும் பங்குகளுக்கான தொகை நவம்பர் 13ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐவெகோ-வின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் அளவையும், மகத்தான வளர்ச்சி வாய்ப்பையும் எடுத்துரைத்த நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தக அளவு அதிகரிக்கும் என்றும், வருவாய் உயரும் என்றும், லாபம் அதிகரிக்கும் என்றும் நாங்கள் நம்புவதாக தொவித்தார்.

Summary

Tata Motors and Iveco announced that the combined enterprise will be the world's fourth-largest commercial vehicle maker.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.