தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சை பெரிய கோயிலில் 1,041வது சதய விழா! மங்கள இசையுடன் தொடங்கியது!

1,041வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது பற்றி...

The 1,041st Sadaya Vizha

சதய விழா - video crop

Published On :21 அக்டோபர் 2026, 12:24 pm IST

தஞ்சை பெரியகோயிலில் 1,041வது சதய விழா மங்கள இசையுடன் இன்று காலை தொடங்கியது.

பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டியாஞ்சலி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு விழாவாக இன்றும், நாளையும் (அக். 21, 22) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ரேவதி, தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த இரண்டு நாள்களுக்கும் பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் கவியரங்கம், பட்டிமன்றம், திருமுறை, 1,041 நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இரண்டாம் நாளான நாளை காலை அரசு சார்பில் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து சோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.