தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சதயவிழா: இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தஞ்சை பெரிய கோயிலில் சதயவிழா பற்றி..

இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On :22 அக்டோபர் 2026, 11:57 am IST

தஞ்சை பெரிய கோயிலில் சதயவிழாவை முன்னிட்டு இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு விழாவாக நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நாட்டுப்புற கலைஞர்களின் ஊர்வலம், கவியரங்கம், பட்டிமன்றம், 1,041 நடன கலைஞர்களின் நாட்டியாஞ்சலி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் இரண்டாம் நாளான இன்று ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சோழன்‌ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. யானை மீது மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி, எம்எல்ஏ விஜய் சரவணன், 28வது தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைதொடர்ந்து ஓதுவார்களின் திருமுறை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகிக்கு 48 வகையான பேராபிஷேகம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.