கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: வீரமணி உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் ஆஜா்

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, 4 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

வீரமணி - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 2:44 am IST

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, 4 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரை இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, துணை காவல் ஆணையா் கீதாஞ்சலி, காவல் உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் வீரமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா். போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் முடிந்ததையடுத்து, வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை காணொலி வாயிலாகவும், கணேசனை நேரிலும் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் திங்கள்கிழமை போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

இதையடுத்து, 4 பேரையும் வரும் நவ. 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.