மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை - கோவா இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்தில் சென்னை - கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

indigo

இண்டிகோ விமானம் - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 12:41 pm IST

சென்னை விமான நிலையத்தில் சென்னை - கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தி அவர்களை வெளியேற்றிய பின்னர் விமானத்தைத் தனிமைப்படுத்தினர்.

6E588 என்ற எண் கொண்ட இண்டிகோ நிறுவன விமானமானது, மாலை 5.40 மணிக்கு கோவாவுக்குப் புறப்படவிருந்த நிலையில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக விமான நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

பின்னர், வெடிகுண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழு வரவழைக்கப்பட்டு விமானம் தொலைதூர நிறுத்துமிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்த பின்னர் இரவு 9.20 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனக் கண்டறியப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அந்த விமானம் இண்டிகோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 5 மணி நேரம் தாமதமாக கோவா புறப்பட்டுச் சென்றது.

Summary

A bomb threat was made at Chennai Airport yesterday against an IndiGo flight scheduled to depart from Chennai to Goa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.