மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணமா?

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்ததாக வெளியானத் தகவல்கள் பற்றி...

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - AP

Published On :20 அக்டோபர் 2026, 11:48 am IST

வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் மூளைச்சாவு அடைந்ததாகவும் இரு நாள்களாகத் தகவல்கள் வெளியாகின.

அவர், கோமாவில் இருப்பதால் அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.

ஒருவேளை கிம் உயிரிழந்தால் அவருக்குப் பின் நாட்டின் அதிபராக யார் பதவி வகிப்பார் என்றும் விவாதங்கள் கிளம்பின. அதிபர் பதவிக்கான அதிகாரப் போட்டியில் கிம்மின் மகளும், சகோதரியான கிம் யோ ஜோங்கும் இடம்பெறுவர் எனக் கூறப்பட்டது.

ஆனால் எந்த ஆதாரமோ, அதிகாரப்பூர்வ தகவலோ இன்றி இந்த வதந்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், கிம் தனது மகள் கிம் ஜூ ஏ மற்றும் மனைவி ரி சோல் ஜூ உடன் தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை பார்வையிட்ட  அதிபர் கிம் ஜான் உங்

வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை பார்வையிட்ட அதிபர் கிம் ஜான் உங் - AP

கண்காட்சியில் பொருட்களை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் உரையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படங்களை வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை பார்வையிட்ட  அதிபர் கிம் ஜான் உங்

வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை பார்வையிட்ட அதிபர் கிம் ஜான் உங் - AP

கிம்மின் உடல்நிலை குறித்து இதுபோன்ற வதந்திகள் பரவுவது முதல் முறையல்ல. வட கொரியா ரகசியத் தன்மையுடன் இயங்கும் நாடு என்பதால், பொதுப் பார்வையிலிருந்து சில காலம் அவர் விலகியிருந்தால் கூட அவரது உடல்நிலை தொடர்பான யூகங்கள் எழும்.

வட கொரியாவின் தலைமையில் ஏற்படும் மாற்றங்கள் அந்தப் பிராந்தியம் முழுவதிலும் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் உலக நாடுகளும், பல உளவு நிறுவனங்களும் கிம் ஜான் உங்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Summary

Regarding reports that North Korean President Kim Jong Un has died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.