மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ட்ரோன் மேம்பாட்டுக்கு கிம் ஜோங் உன் உத்தரவு

புதிய நவீன ஆயுதங்களை முழுவீச்சில் உருவாக்கவும் வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.

கிம் ஜோங் உன் - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 2:05 am IST

அண்டை நாடான தென் கொரியாவுடன் எல்லைப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரோன் தொழில்நுட்பத்தை விரைவாக விரிவுபடுத்தவும், புதிய நவீன ஆயுதங்களை முழுவீச்சில் உருவாக்கவும் வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.

மரபுசாா், அணு ஆயுத பலத்தை வலுப்படுத்துவதோடு, நவீன ட்ரோன் தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதிலும் வட கொரியா முழு கவனம் செலுத்தி வருகிறது. உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட படைகள் மூலம் வட கொரியாவுக்கு நவீன ட்ரோன் போா்வியூகங்கள் குறித்த அனுபவம் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

இதையொட்டி, அதிநவீன தாக்குதல் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி உபகரணங்களின் கண்காட்சியை அதிபா் கிம் ஜோங் உன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் நாடு மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய உரையாற்றிய அவா், இத்துறையை விரைவாக விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.