தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீனாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்! எப்படி வந்திருக்கிறார் தெரியுமா?

சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பயணம் மேற்கொண்டுள்ளது பற்றி..

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

Published On :24 அக்டோபர் 2026, 12:39 pm IST

சீனா - வட கொரியா இடையே அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் வழியாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உக் சீனத்துக்கு திடீரென வருகை தந்துள்ளார்.

கோமா நிலைக்குச் சென்றுவிட்டார், இல்லை இறந்தேவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், திடீரென சீனாவுக்குப் பயணம் சென்றுள்ளதாக தென் கொரிய அரசு தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான டான்டோங் பகுதிக்கு, கிம் ஜாங்-உன் வருகை வந்துள்ளதாகவும், இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் யாலு ஆற்றின் மீது கட்டப்பட்ட புதிய மேம்பாலம் வழியாக இவர் சீனாவுக்கு வந்திருக்கிறார் என்றும், இந்த ஆண்டில் இதுதான் இவரது முதல் பயணம் என்றும் குறிப்பிடப்பட்டுளள்து.

டன்டோங் பகுதியில் முன்னதாக கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. வட கொரியாவின் சினுய்ஜு, சீனாவின் டான்டோங் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருந்த இந்த பாலம் பத்தாண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் அக். 15ஆம் தேதிதான் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

North Korean leader Kim Jong-un is in China! Do you know how he got there?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.