உலகின் முக்கிய நாடுகளில் ஜென் ஸீக்கள் போராட்டம்!

உலக நாடுகளில் ஜென் ஸீ போராட்டம் குறித்து...

India | France | Chile | Spain

இந்தியா | பிரான்ஸ் | சிலி | ஸ்பெயின் - AP

Published On :20 அக்டோபர் 2026, 7:30 am IST

இந்தியா உள்பட உலகின் முக்கிய நாடுகளில் ஜென் ஸீ தலைமுறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியா உள்பட உலகின் முக்கிய நாடுகளில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இளம் தலைமுறையினர் போராட்டம் நடத்தி வருவதால், அந்தந்த நாடுகளில் அசாதாரண நிலைமை நிலவி வருகிறது.

இந்தியாவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு நடந்ததாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தொடர்பாக இளம் தலைமுறையினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம், அந்நாட்டு அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக மக்களும் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு கூறும்நிலையில், 8 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தொழிற்சங்கள் கூறுகின்றன.

இதேபோல், ஸ்பெயின் நாட்டிலும் பண வீக்கம், அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஸ்பெயின் நாட்டில் வருகிற நவம்பர் 29-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி நாட்டில் இனவெறி, தீவிர வலதுசாரி அரசியல், ஜனநாயக உரிமை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிலி நாட்டில் கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

அல்பேனியா நாட்டில் வேலைவாய்ப்பின்மை, கல்விக்கான செலவு அதிகரிப்பு, அரசுத் துறைகளில் ஊழல் உள்ளிட்ட காரணிகளால் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Summary

Gen Z protests in major countries of the world

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.