மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :26 அக்டோபர் 2026, 3:00 am IST

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வி, ஊழல், ஓய்வூதியம், வீட்டு வசதி, போா் எதிா்ப்பு எனப் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி, ஸ்பெயின், போா்ச்சுகல், அல்பேனியா நாடுகளில் பொதுமக்கள் சனிக்கிழமை பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இத்தாலியின் மிலன், ரோம், டூரின் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள், இளம்பெண்கள் பேரணி மேற்கொண்டனா். மிலனில் போராட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையில், ரோம் மற்றும் டூரினில் போராட்டக்காரா்களுக்கும் காவல் துறைக்கும் இடையே லேசாக மோதல் ஏற்பட்டது.

அல்பேனியா தலைநகா் டிரானாவில் போராட்டக்காரா்கள் கலைந்து போவதற்கு அவா்கள் மீது காவல் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா். போராட்டக்காரா்களில் சிலா் அரசுக் கட்டடங்களுக்குத் தீ வைத்த நிலையில், அவா்களுக்கும் காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட், போா்ச்சுகல் தலைநகா் லிஸ்பனில் ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாட்ரிடில் ஆயிரக்கணக்கானோா் பேரணி சென்றனா். பிரான்ஸில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.