தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 6:43 pm IST

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை ரூ.167.12 கோடி, இன்று (நவ. 2) 1,06,001 பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 21,333 பேருந்துகள் 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உள்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவையினை தினசரி 2.18 கோடி மக்கள் பயன்பெறும்வகையில் வழங்கி வருகின்றது.

இதில் 72% பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு இன்றியமையததாகும்.

போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (நவ. 2) வழங்கப்பட்டுள்ளது.

Summary

A bonus has been provided to Tamil Nadu State Transport employees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.