தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு! தமிழகத்தில் இல்லை, புதுவையில்..!

புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

bonus

புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - Photo: Dinamani | Gemini AI

Published On :27 அக்டோபர் 2026, 1:32 pm IST

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகை போனஸ் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற அக். 8 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுவையில் உள்ள பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 - 26 காலகட்டத்தில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 6 மாதங்கள் அரசுப் பணியிலிருந்தவர்கள் போனஸுக்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அதிகபட்சமாக ரூ. 7,000 வழங்கப்படும் என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லை

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் ஆகியவற்றில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் அறிவிக்கப்படவில்லை.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பை வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசு அறிவிக்கும்.

இந்த நிலையில், இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

Summary

Bonus announced for government employees! Not in Tamil Nadu, but in Puducherry!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.