கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 7:33 pm IST

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும், கூட்டுறவுத் துறையில் குறைந்த எண்ணிக்கை பணியாளர் கொண்டு நிகர லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு 20% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணியாற்றுவோருக்கு ரூ. 3,000 கருணைத் தொகையும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை ரூ. 2400 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 44,573 பணியாளர்களுக்கு ரூ. 49.69 கோடி போனஸ், கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

Summary

Diwali bonus of up to 20% for cooperative sector employees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.