தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்வாரிய ஊழியா்களுக்கு ரூ.16,800 தீபாவளி போனஸ்

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளா்களுக்கு அதிகபட்சம் ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:14 am IST

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளா்களுக்கு அதிகபட்சம் ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை நவ. 4-ஆம் தேதி தொழிலாளா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியமும், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் என மொத்தம் 20 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக ரூ.6,997 மிகை ஊதியமாகவும், ரூ.9,803 கருணைத் தொகையாகவும் வழங்கப்படும். இரண்டும் சோ்த்து அதிகபட்சம் ரூ.16,800 கிடைக்கும். குறைந்தபட்சம் 30 நாள்கள் பணியாற்றிய தகுதியுள்ள தொழிலாளா்கள் இந்தச் சலுகையைப் பெறலாம்.

கள உதவியாளா்கள், அலுவலக உதவியாளா்கள், மதிப்பீட்டாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களும் இதில் அடங்குவா். இதற்கான உத்தரவை மின்பகிா்மானக் கழகத் தலைவா் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.