மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி!

ஆர்டிஐ கேள்விக்கு தகவல் இல்லை என்று பதிலளித்துள்ள தமிழக அரசுக்கு கனிமொழி கேள்வி...

CM Vijay | Kanimozhi MP

முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:25 pm IST

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், “புதிய தலைமைச் செயலகம் அமைக்க பட்டினப்பாக்தை தேர்வு செய்ய ஏதாவது ஆய்வு நடத்தப்பட்டதா, எதன் அடிப்படையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பது தொடர்பான முழு விவரங்களை தருக”, “புதிய தலைமைச் செயலகம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்ட இடங்களின் விவரங்களை தருக” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, “இது குறித்த தகவல் இப்பொது அதிகார அமைப்பில் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தமிழக அரசின் பதிலை பகிர்ந்துள்ள திமுக எம்.பி. கனிமொழி,

“புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.

அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் ஜோசப் விஜய்யா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Summary

Is what is happening in Tamil Nadu a people's rule or an astrologer's rule? kanimozhi question!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.