காவிரி விவகாரம்! நீரும் நீதியும் வேண்டும்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடு
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு முறையிட்டுள்ளது குறித்து...

காவிரி நீா் - பிரதிப் படம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கான நீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அக். 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்துக்கான 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி மட்டுமே பெறப்பட்டது. அதேநேரம், கா்நாடகத்தின் 4 முக்கிய நீா்த்தேக்கங்களிலும் அக். 27-ல் நீா் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரி நீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த முறையீட்டில், தமிழக தமிழகத்துக்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டர் நிலம் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடக அரசு இப்படி வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எப்படி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டுக்கான உரிய நீரையும் நீதியையும் வழங்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் முறையீட்டை விரைவாக விசாரிக்க பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Summary
The Tamil Nadu government has filed a plea in the Supreme Court against the Karnataka government for failing to release water for Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





