
ராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!
அதிமுகவில் ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடை நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...
மரகதம் குமரவேல் | சத்தியபாமா | இசக்கி சுப்பையா | ஜெயக்குமார் - கோப்புப் படம்
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் கட்சி தாவியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கட்சி மாறிய இவர்கள் நால்வரும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் செல்வகுமார் என்பவர் கடந்த ஜூன் மாதத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதாகக் கூறி, நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவர்கள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் மூல மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து, மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Summary
Petition seeking anti-defection action against AIADMK MLAs who resigned has been dismissed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





