மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேர்தல் வழக்கு: அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா மனு தள்ளுபடி

அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையாவின் மனு தள்ளுபடி குறித்து...

Ambasamudram Isakki Subbiah's petition in the election case dismissed
Published On :1 அக்டோபர் 2026, 11:55 am IST

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பின்னர், பதவியை ராஜிநாமா செய்து, தவெகவில் இணைந்தார்.

இதனிடையே, இசக்கி சுப்பையாவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் பதிலளிக்கும்படி இசக்கி சுப்பையாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, வாக்காளர் காந்திமதிநாதனின் மனுவை நிராகரிக்க மறுத்து, இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோல, தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள சில பத்திகளை நீக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை ஏற்று, அந்த பத்திகளை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற பொதுநல வழக்கு விசாரணையில் இருந்துவரும் சூழலில், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா தாக்கல் செய்துள்ள மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Summary

Ambasamudram Isakki Subbiah's petition in the election case dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.