தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளது குறித்து...

seeman

சீமான் - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:49 pm IST

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருப்பதாவது:

என்னைப் பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள்? சொந்த பந்தம் பார்த்தால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. உறவுகள் வேறு, அரசியல் வேறு.

நாம் தமிழர் கட்சி 5 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்” என்றார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சீமான்,

“அனைத்து சாதி சமயத்துக்கும் நான் பொது வேட்பாளர். தோற்று இருக்கிறோம், துவண்டதில்லை. இது நான் ஏற்றுக்கொண்ட கொள்கை, சமரசம் இல்லாமல் சண்டை செய்வேன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் வெளியேறின. திமுகவும் நாங்களும் போட்டியிட்டோம். அப்போது நாங்கள் பொது வேட்பாளரா? அதிகாரத்தை எதிர்த்து போட்டியிட முடியாமல் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விலகின. தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டும் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

தேனி விவகாரத்தில் சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகுவாரா?” என்றார்.

Summary

Seeman, the chief coordinator of the Naam Tamilar Katchi, has announced that his party will contest the Ambasamudram by-election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.