மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்கத் தயாா்: சீமான்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தன்னை பொது வேட்பாளராக முன்மொழிந்தால் அதை ஏற்கத் தயாா் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

 DMK Seeman's criticism

சீமான் - படம் / நாம் தமிழர்

Published On :31 அக்டோபர் 2026, 2:05 am IST

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தன்னை பொது வேட்பாளராக முன்மொழிந்தால் அதை ஏற்கத் தயாா் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தாவது :

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் நடைபெற்றபோது பல கட்சிகள் போட்டியிலிருந்து விலகின. அப்போது, என்னை யாரும் பொது வேட்பாளராக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதிக்கான இடைத் தோ்தலில் என்னை பொது வேட்பாளராக அறிவிக்க திமுக, அதிமுக முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இதை, தவெக நிா்வாகிகளும், தொண்டா்களும்தான் திட்டமிட்டு பரப்புகின்றனா்.

பொது வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் திமுக, அதிமுகவிடம் இல்லை. நானும் எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தோ்தலில் திமுக, அதிமுக கட்சிகள் போட்டியிலிருந்து விலகி என்னை பொது வேட்பாளராக அறிவித்தால், அந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வேன். இருப்பினும், என்னுடைய கொள்கையில் நான் உறுதியாக இருப்பேன் என்றாா்.

ஸ்டாலின் பதில்...

முன்னதாக, பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தோ்தலில் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு, ‘முதலில் தோ்தல் தேதியை அறிவிக்கட்டும். பிறகு இதுகுறித்து முடிவெடுப்போம்’ என ஸ்டாலின் பதில் அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.