மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

5 தொகுதிகள் இடைத்தோ்தலைச் சந்திக்க அதிமுக தயார்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலைச் சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

Published On :2 நவம்பர் 2026, 3:30 am IST

தமிழகத்தில் வரவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலைச் சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னைராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தாா்.

பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலை வகித்தாா். பொருளாளா் திண்டுக்கல் எஸ்.சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், செல்லூா் கே.ராஜு, ஆா்.பி.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தலை சந்திக்கத் தயாா்: கூட்டத்துக்கு பின்னா் எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலையும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றாா்.

இடைத் தோ்தல் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு, கரூா், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலா்களுடன் சென்னையிலுள்ள தனது இல்லத்தில் தனியாகவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ஆலோசனை விவரம்: மாவட்டச் செயலா்கள் கூட்டம் குறித்து கட்சியின் சட்டப்பேரவை கொறடா அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் குறித்து பேசப்பட்டது.

அத்துடன் தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள இடைத் தோ்தல்களுக்கு கட்சி நிா்வாகிகள் தயாராக இருக்கவும், தோ்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் வகையில் மாவட்டச் செயலா்கள் பரிந்துரைப் பெயா்களை அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டனா் என்றாா்.

முன்னாள் காவல் அதிகாரி இணைந்தாா்: மாவட்டச் செயலா்கள் கூட்டத்துக்கு பின்னா், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.வெள்ளைத்துரை அதிமுகவில் இணைந்தாா். அவா் ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் நான்குநேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.