
நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்
நெருங்கும் தீபாவளியால் புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்
ரயில் பயணம் - கோப்புப் படம்
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாள்களே உள்ள நிலையில், சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்திருப்பதால் வட மாநிலம் செல்லும் ரயில்களும் ரயில் நிலையங்களும் கூட்ட நெரிசலுக்கு உள்ளாகியிருக்கிறது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் நடைமேடைகள் முழுக்க புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பியிருக்கிறது. அது போல வட மாநிலம் நோக்கி செல்லும் ரயில்களில், முன்பதிவு செய்த பெட்டிகளிலும்கூட வட மாநில தொழிலாளர்கள் ஏறி நின்று கொள்வதால், அவசர தேவைக்குக் கழிப்பறை செல்லக்கூட முடியாமல் அவதி அடைவதாக முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் கூறியிருக்கிறார்கள்.
ஹௌரா மெயில், ஷாலிமர் விரைவு ரயில்கள் கடும் கூட்ட நெரிசலுடன் பயணிக்கிறது. இவ்விரு ரயில்களிலும் முன்பதிவு அல்லாத பெட்டிகள் நான்குதான் உள்ளன. இதனால், ஒவ்வொரு பெட்டிகளும் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ரயில் பெட்டியல் 100 பேர்தான் ஏற்ற முடியும் என்றால் அதை விட இரண்டு மடங்கு அதிகமாக 200 பேர் பயணிக்கிறார்கள். கதவு இடுக்கு, லக்கேஜ் வைக்கும் பகுதி, ரயில் பெட்டியின் படிகட்டுகள் கழிப்பறையை ஒட்டிய பகுதிகள் என ஒரு இடத்தையும் விட்டுவைப்பதில்லை.
இப்படி ஒரு சில மணி நேரம் வேண்டுமானால் பயணிக்கலாம், ஆனால் பல மணி நேரம் இந்த கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டும் என்றால் அது மக்களுக்கு எவ்வளவு பெயரி துயரத்தைக் கொடுக்கும் என்று சொல்லில் விவரிக்க முடியாது என்கிறார்கள் நேரில் பார்ப்பவர்கள்.
சென்னை ரயில் நிலையங்களில் ரயில்வே காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பயணிகள் ஒழுங்குபடுத்தி ரயில்களில் ஏற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் நிரம்பி வழிவதால், அடுத்தடுத்த சில ரயில் நிலையங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் முன்பதிவு பெட்டிகளில் ஏறி விடுகிறார்கள். இவர்களை வெளியேற்றவே முடியாத நிலையும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





