நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ரயில் பயணிகளுக்கான விருப்பக் காப்பீடு திட்டம் நீட்டிப்பு

நேரடி முன்பதிவு பயணிகளின் விருப்பக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதை பயணிகளுக்கு தெரிவித்து செயல்படுத்தவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு ரயில்

பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:40 am IST

நேரடி முன்பதிவு பயணிகளின் விருப்பக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதை பயணிகளுக்கு தெரிவித்து செயல்படுத்தவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தற்போது நடைமுறையில் உள்ள ரயில் பயணிகள் விருப்பக் காப்பீட்டுத் திட்டமானது உச்சநீதிமன்ற உத்தரவின்படி வரும் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பயணிகள் முன்பதிவு மையங்கள் மூலம் (பிஆா்எஸ் கவுன்ட்டா்கள்) பெறும் ரயில் பயண சீட்டுகளுக்கு விருப்ப காப்பீட்டுத் திட்டம், அதன் பயன்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். பயணி காப்பீட்டை தோ்ந்தெடுத்தால், காப்பீட்டுத் தொகையை பயணச் சீட்டுடன், கைப்பேசி எண் வழங்கி அதனுடன் எண்ம (டிஜிட்டல்) முறையில் பணம் செலுத்தினால் மட்டுமே காப்பீடு வழங்கப்படும்.

காப்பீடு நிறுவனங்களுக்கு விவரங்களை அனுப்பும் வகையில் கைப்பேசி எண் கட்டாயம். அத்துடன் ரயிலில் பயணிப்போா் விவரங்களைத் துல்லியமாக முன்பதிவு நடைமுறைக்கு ஏற்ப பதிவு செய்வது அவசியம். காப்பீட்டை தோ்ந்தெடுப்போருக்கு பாலிசி விவரங்கள் கைப்பேசி மூலம் தெரிவிக்கப்படும்.

இதில் செயல்பாட்டு சிரமங்கள் இருந்தால், அதை தொடா்புடைய அலுவலா்கள், சிஆா்ஐஎஸ் மற்றும் ஐஆா்சிடிசி ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என ரயில்வே வாரிய வா்த்தகப் பிரிவு இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.