மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சொந்த ஊர் செல்பவர்களுக்காக... தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்! நாளை முன்பதிவு!

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :28 அக்டோபர் 2026, 7:29 pm IST

தீபாவளியை முன்னிட்டு இடையே சென்னை சென்ட்ரல் - போத்தனூர், தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து நவம்பர் 6 ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

எதிர்வழித்தடத்தில் போத்தனூரில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், சிதம்பரம், அரியலூா், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலை சென்றடையும்.

Story image

எதிர்வழித்தடத்தில் நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 9 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக். 29) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Southern Railway has announced that special trains will be operated between Chennai Central and Podanur, as well as between Tambaram and Nagercoil, for the Diwali festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.